மத்திய அரசின் கீழ் செயல்படும், காலணி வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம், இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
படிப்பு: பி.எஸ்சி., படிப்புகளாக, காலணி வடிவமைப்பு மற்றும் உற்பத்தி, சில்லறை மற்றும் பேஷன் வர்த்தகம், தோல் மற்றும் ஆபரணங்கள் வடிவமைப்பு ஆகியவை வழங்கப்படுகின்றன. மேலும், காலணி வடிவமைப்பு மற்றும் உற்பத்தி, சில்லறை மற்றும் பேஷன் வர்த்தகம், கேட்/கேம் ஆகியவை எம்.எஸ்சி., படிப்புகளாகவும் வழங்கப்படுகின்றன.
வயது வரம்பு: பி.எஸ்சி., படிப்புகளுக்கு 25 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்; எம்.எஸ்சி., படிப்புகளுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை.
தகுதிகள்: இளநிலை படிப்புகளுக்கு பிளஸ் 2வில் தேர்ச்சி. முதுநிலை படிப்புகளுக்கு ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி.
சேர்க்கை முறை: நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 22
விபரங்களுக்கு: