எம்.எஸ்சி., எம்.பில்., அட்மிஷன் | Kalvimalar - News

எம்.எஸ்சி., எம்.பில்., அட்மிஷன்

எழுத்தின் அளவு :

அண்ணா பல்கலைக்கழகம், எம்.எஸ்சி., மற்றும் எம்.பில்., பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

படிப்புகள்: எம்.எஸ்சி.,- இயற்பியல், வேதியியல், கணிதம், ஜியாலஜி, மீடியா சயின்ஸ், எம்.பில்., - இயற்பியல், வேதியியல், கணிதம், ஆங்கிலம், கிரிஸ்டல் சயின்ஸ், ஜியாலஜி.

தகுதிகள்: அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில், விண்ணப்பிக்கும் படிப்புக்கு ஏற்ப இளநிலை பட்டப்படிப்பில், பி.எஸ்சி., - கணிதம், இயற்பியல், வேதியியல், புவியியல், பி.சி.ஏ., பி.டெக்., பி.இ., பி.ஏ., இதழியல் ஆகிய ஏதேனும் ஒன்றில் தேவைப்படும் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுநிலை பட்டப்படிப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல், ஆங்கிலம், மெட்டீரியல் சயின்ஸ், மெடிக்கல் சயின்ஸ், ஜியாலஜி உள்ளிட்ட படிப்பில் ஏதேனும் ஒன்றில் தேவைப்படும் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சேர்க்கை முறை: நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

தேர்வு நாள்:  ஜூன்  4

விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 13

விபரங்களுக்கு: www.aukdc.edu.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us