ராணுவக் கல்லூரியில் சேர்க்கை | Kalvimalar - News

ராணுவக் கல்லூரியில் சேர்க்கை

எழுத்தின் அளவு :

உத்தரகாண்ட் மாநிலம், டேராடூனில் உள்ள தேசிய ராணுவக் கல்லூரியில், மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு: ஜனவரி 1, 2018ம் தேதி அன்று 11.5 வயதுக்கு குறையாமலும், 13 வயது பூர்த்தியாகாமலும் இருத்தல் வேண்டும்.
 
தகுதிகள்: அங்கீகரிக்கப்பெற்ற பள்ளியில் ஏழாம் வகுப்பு பயில்பவராகவோ அல்லது தேர்ச்சி பெற்றவராகவோ இருத்தல் வேண்டும்.

சேர்க்கை முறை: எழுத்து தேர்வு (ஆங்கிலம், கணக்கு மற்றும் பொது அறிவு) மற்றும் நேர்முகத் தேர்வு (அறிவுக் கூர்மை மற்றும் தனித்தன்மை) மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும். ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில் விடையளிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 31 

விபரங்களுக்கு: www.tnpsc.gov.in மற்றும்  www.rimc.gov.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us