‘டான்செட்’ தேர்வு அறிவிப்பு! | Kalvimalar - News

‘டான்செட்’ தேர்வு அறிவிப்பு!

எழுத்தின் அளவு :

எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., போன்ற முதுநிலை படிப்புகளை அரசு ஒதுக்கீட்டில், தமிழக கல்லூரிகளில் படிக்க விரும்புகிறீர்களா? ‘ஆம்’ எனில் நீங்கள் கட்டாயம் எழுத வேண்டிய தேர்வு, அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் ‘டான்செட்’!

தமிழக அரசின் சார்பில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும், இந்த தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையிலேயே, பல்கலைக்கழக துறைகள், பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக மண்டல வளாகங்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகள் மற்றும் சில நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் ஆகியவை முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன.

தகுதிகள்
எம்.பி.ஏ., படிப்பிற்கு, அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எம்.சி.ஏ., படிப்பிற்கு கணிதப் பாடத்துடன் கூடிய இளநிலை பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

எம்.இ., எம்.டெக்., உள்ளிட்ட படிப்புகளுக்கு பொறியியல் அல்லது தொழில்நுட்பப் பாடத்தில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இடஒதுக்கீட்டுப் பிரிவினர் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது. தற்போது கல்லூரிகளில் இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு
எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான்., ஆகிய படிப்புகளுக்கு ஒரு தேர்வு, எம்.பி.ஏ., மற்றும் எம்.சி.ஏ., படிப்புகளுக்கு தனித்தனி தேர்வு என மொத்தம் மூன்று தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

எம்.பி.ஏ., படிப்பிற்கான தேர்வில் கணிதம், வர்த்தகம் மற்றும் ஆங்கில மொழித்திறன் ஆகிய திறன்கள் பரிசோதிக்கப்படும். எம்.சி.ஏ.,படிப்பிற்கான தேர்வில், குவாண்டிடேட்டிவ் ஏபிலிட்டி, அனாலிடிக்கல் ரீசனிங், லாஜிக்கல் ரீசனிங், கம்ப்யூட்டர் அவார்னஸ் ஆகிய திறன்கள் பரிசோதிக்கப்படும்.

எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான்., ஆகிய படிப்புகளுக்கான தேர்வில், இன்ஜினியரிங் மேத்மேடிக்ஸ், பேசிக் இன்ஜினியரிங் அண்ட் சயின்ஸ் மற்றும் துறைக்கு ஏற்ற பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். தவறான பதில்களுக்கு, 1/3 என்ற வீதத்தில் மதிப்பெண் பிடிக்கப்படும்.

தேர்வு நாட்கள்:
எம்.சி.ஏ., - மார்ச் 25 (காலை)
எம்.பி.ஏ., - மார்ச் 25 (மதியம்)
எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., மற்றும் எம்.பிளான்., - மார்ச் 26

விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 20

விபரங்களுக்கு: www.annauniv.edu/tancet2017

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us