எய்ம்ஸில் அட்மிஷன் | Kalvimalar - News

எய்ம்ஸில் அட்மிஷன்

எழுத்தின் அளவு :

புதுடில்லி, பாட்னா, போபால், ஜோத்பூர், புவனேஸ்வர், ரிஷிகேஷ் மற்றும் ராய்ப்பூர் ஆகிய பகுதிகளில் செயல்படும், அனைத்து இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம் (எய்ம்ஸ்), இளநிலை மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு மற்றும் முதுநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

படிப்பு: எம்.பி.பி.எஸ்.,

தகுதிகள்: பிளஸ் 2வில் ஆங்கிலம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களை முதன்மை பாடமாக பயின்று 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., மாணவர்கள் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதுமானது.

தேர்வு முறை: ஆன்லைனில் நுழைவுத்தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 23

கலந்தாய்வு
எம்.டி., எம்.எஸ்., எம்.சிஎச்., டி.எம்., மற்றும் எம்.டி.எஸ்., போன்ற முதுநிலை பட்டப்படிப்பு நுழைவுத்தேர்வில் பங்குபெற்ற மாணவர்களுக்கான பொது கலந்தாய்வு பிப்., 21ம் தேதி, புதுடில்லியில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 19

விபரங்களுக்கு: www.aiimsexams.org

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us