ஐ.எஸ்.எம்.,ல் எம்.பி.ஏ., படிக்கலாம் | Kalvimalar - News

ஐ.எஸ்.எம்.,ல் எம்.பி.ஏ., படிக்கலாம்

எழுத்தின் அளவு :

ஜார்கண்ட் மாநிலம், தன்பாத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (இந்தியன் ஸ்கூல் ஆப் மைன்ஸ்), எம்.பி.ஏ., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினர் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் போதுமானது.

சேர்க்கை முறை: ‘கேட்’ தகுதி தேர்வு மதிப்பெண், குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 10

விபரங்களுக்கு: http://iitism.ac.in/

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us