மத்திய பல்கலையில் அட்மிஷன் | Kalvimalar - News

மத்திய பல்கலையில் அட்மிஷன்

எழுத்தின் அளவு :

பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனமாக இயங்கும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், பல்வேறு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில் இந்த மத்திய பல்கலைக்கழகம் செயல்படுகிறது.

படிப்புகள்: வேளாண்மை, சுற்றுச்சூழல் மற்றும் நிலையான அபிவிருத்தி, மேலாண்மை, மருத்துவ அறிவியல் ஆகிய 5 துறைசார்ந்த கல்வி நிறுவனங்களின்கீழ் நவீன மருத்துவம், ஆயுர்வேதம், பல் மருத்துவம், கலை, வணிகம், சட்டம், மேலாண்மை, அறிவியல், சமூக அறிவியல், கால்நடை அறிவியல் உட்பட 134 வகையான பிரிவுகளில் இளநிலை, முதுநிலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தகுதி: தேர்வு செய்யும் படிப்புகளுக்கு ஏற்ப கல்வித் தகுதிகளும், வயது வரம்பும் மாறுபடும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 4

விபரங்களுக்கு: www.bhuonline.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us