குரூஸ் எனப்படும் கடற்பயணம் தொடர்பான வேலையில் சேர விரும்புகிறேன். இதைப் பற்றிக் கூறவும். | Kalvimalar - News

குரூஸ் எனப்படும் கடற்பயணம் தொடர்பான வேலையில் சேர விரும்புகிறேன். இதைப் பற்றிக் கூறவும். ஜனவரி 31,2009,00:00 IST

எழுத்தின் அளவு :


கடற்பயணம் நீண்ட பயணமாக இருப்பதால் அதில் பயணம் செய்வோருக்கான அனைத்துத் தேவைகளையும் அந்த கப்பல் நிறுவனம் செய்ய வேண்டியிருப்பதால் இதில் உள்ள பணி வாய்ப்புகளும் பரந்து பட்டவை. உணவகம், தங்குமிடம் போன்ற பல்வேறுபட்ட பணித் தன்மைகளும் இதில் உள்ளன. எனவே கேட்டரிங் மற்றும் ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்தவருக்கான வாய்ப்புகள் இதில் உள்ளன.

பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ள இசைக்குழு, பேண்ட் வாத்தியக் குழு, நடனக் குழு போன்ற திறன் பெற்றவருக்கும் கப்பல் நிறுவனங்கள் வாய்ப்பளிக்கின்றன. கப்பலைப் பொறுத்தவரை இன்ஜினியர்கள், மெக்கானிக்கல் திறன் பெற்றிருப்பவர்களுக்கும் அதிகமான தேவை இருக்கிறது. உடல் நலம், சுகாதாரம் போன்ற பணிகளுக்கும் இங்கு நிறைய இடம் உள்ளது.

இது தவிர நிர்வாகப் பணியிடங்களும் கப்பலில் உள்ளன. பிட்னஸ் டிரெய்னர், மசாஜ் போன்ற உடல் நலப் பணிகள் ஆகியவற்றில் திறன் பெற்றவருக்கும் வாய்ப்புகள் உள்ளன. மேலும் ரிசர்வேஷன், புக்கீப்பிங் பணிகளை அறிந்தவருக்கும் வாய்ப்புகள் உள்ளன.

Search this Site

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us