நாட்டியம் கற்க ஆசையா? | Kalvimalar - News

நாட்டியம் கற்க ஆசையா?

எழுத்தின் அளவு :

சென்னை பல்கலையில், சுயநிதி கல்வி முறையில் 2 ஆண்டுகள் கொண்ட எம்.ஏ., பரதநாட்டியம் மற்றும் ரிதமோலஜி பட்டப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு: 21 வயதுக்கு மேல் இருத்தல் வேண்டும்.

தகுதிகள்: சென்னை பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பல்கலைக்கழக விதிமுறைப்படி 5 ஆண்டுகள் அனுபவமிக்கவர்கள் அல்லது டிப்ளமோ படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 21 வயது நிரம்பியர்களாகவும் இருக்க வேண்டும். முழுமையான விதிமுறைகளை அறிய பல்கலைக்கழக இணையதளத்தை பார்க்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 31

மேலும் விவரங்களுக்கு: www.unom.ac.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us