இக்னோ.,வில் மாணவர் சேர்க்கை | Kalvimalar - News

இக்னோ.,வில் மாணவர் சேர்க்கை

எழுத்தின் அளவு :

இந்திராகாந்தி திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் எம்.பில்., மற்றும் பிஎச்.டி., படிப்பில், 2017ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

படிப்புகள்:
எம்.பில்., - சமூகவியல், பொருளியல், அரசியல் அறிவியல், மொழிபெயர்ப்பு ஆய்வுகள், சமூக பணி, தொலைநிலைக் கல்வி மற்றும் வணிகவியல்.

பிஎச்.டி.,-ஊரக வளர்ச்சி, உணவு மற்றும் ஊட்டச்சத்து, ஆங்கிலம், வரலாறு, சமூகவியல், பொருளியல், அரசியல் அறிவியல், பொது நிர்வாகம், உளவியல், கணினி அறிவியல், சிவில், மெக்கானிக்கல் மற்றும் எலட்ரிக்கல் இன்ஜினியரிங், வணிகவியல், புவியியல், சமூக பணி, ஊடகவியல் மற்றும் தொடர்பியல், புள்ளியியல், கலை அறிவியல், வேதியியல், சட்டம், உயிர்வேதியியல், மேலாண்மை, நர்சிங் உள்ளிட்ட பாடப்பிரிவுகள்.

தகுதிகள்: விண்ணப்பிக்கும் துறைகளுக்கு ஏற்ற பாடப்பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சேர்க்கை முறை: எழுத்து தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 31

மேலும் விவரங்களுக்கு: www.ignou.ac.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us