மத்திய அரசின் கீழ் இயங்கும், ஏர் இந்தியா நிறுவனத்தில், கிரஜூவேட் டிரெய்னி பிரிவில் உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியிடங்கள்: ஏர்கிராப்ட் மெயின்டனஸ் இன்ஜினியர் (ஏ.எம்.இ.,) மற்றும் இன்ஜினியரிங்சப்போர்ட் சர்வீஸ்.
வயது வரம்பு: பொதுப் பிரிவு - 28, ஒ.பி.சி., - 31, எஸ்.சி.,/எஸ்.டி.,- 33.
கல்வித் தகுதி: பி.இ., அல்லது பி.டெக்., பட்டப் படிப்பில், மெக்கானிக்கல், ஏரோநாட்டிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், டெலிகம்யூனிகேஷன், இன்ஸ்ட்ரூமென்டேஷன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் போன்ற ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ‘கேட்’ தேர்வில் பெற்ற மதிப்பெண்களும் கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 15
மேலும் விவரங்களுக்கு: