மாணவர்களுக்கு உதவித்தொகை | Kalvimalar - News

மாணவர்களுக்கு உதவித்தொகை

எழுத்தின் அளவு :

முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும் எஸ்.சி., /எஸ்.டி., பிரிவு மாணவர்களுக்கான உதவித்தொகை அறிவிப்பை பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.,) வெளியிட்டுள்ளது.

உதவித்தொகை எண்ணிக்கை: 1000

வயது வரம்பு: ஆண் - 45 மற்றும் பெண் - 50 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

தகுதிகள்: முழு நேரக் கல்வி முறையில், முதுநிலை பட்டப் படிப்பில் பொறியியல், தொழில்நுட்பம், மேலாண்மை மற்றும் மருந்தியல் போன்ற ஏதேனும் ஒரு துறையில் சேர்க்கை பெற்றிருக்க வேண்டும்.

உதவித்தொகை: எம்.டெக்., படிப்புக்கு, மாதம் ரூபாய் 5 ஆயிரம் மற்றும் இதர படிப்புகளுக்கு, மாதம் ரூபாய் 3 ஆயிரம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: செப்டம்பர் 15

மேலும் விவரங்களுக்கு: www.ugc.ac.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us