மத்திய அரசு உதவித்தொகைகள்! | Kalvimalar - News

மத்திய அரசு உதவித்தொகைகள்!

எழுத்தின் அளவு :

மத்திய அரசின், ‘ராஜீவ் காந்தி நேஷனல் பெலோஷிப்’ எனும் உதவித்தொகை அறிவிப்பை, பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.,) வெளியிட்டுள்ளது.

தகுதிகள்: மாற்றுத்திறனாளி மாணவர்கள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில், முதுநிலை படிப்பில் தேர்ச்சி பெற்று, எம்.பில்., அல்லது பிஎச்.டி., பட்டப் படிப்பில் பதிவு செய்திருத்தல் வேண்டும்.

உதவித்தொகை: பாடப்பிரிவை பொறுத்து, மாதம் 16 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை.

தகுதிகள்: எஸ்.சி., எஸ்.டி., பிரிவினை சேர்ந்த மாணவர்கள், அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில், முதுநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்று, எம்.பில்., அல்லது பிஎச்.டி., பட்டப் படிப்பில்,பதிவு செய்திருத்தல் வேண்டும்.

உதவித்தொகை எண்ணிக்கை: எஸ்.சி., பிரிவினர் - 2,000 மற்றும் எஸ்.டி., பிரிவினர் - 667

உதவித்தொகை: பாடப்பிரிவுக்கு ஏற்ப, மாதம் 16 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும். மருத்துவம் மற்றும் வீட்டு வாடகை சலுகையும் உண்டு.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 31

மேலும் விவரங்களுக்கு: www.ugc.ac.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us