பி.எஸ்.என்.எல்., ராஜிவ்காந்தி தொலை தொடர்பு பயிற்சி மையம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து வேலை தேடும் இளைஞர்களுக்கு எப்.டி.டி.எச்.,(பைபர் டூ தி ஹொம்) எனும் சிறப்பு பயிற்சியை வழங்குகின்றன.
தகுதிகள்: 10ம் வகுப்பு அல்லது அதற்கு மேல் படித்திருக்க வேண்டும்.
கால அளவு: 5 வாரக் காலம். பயிற்சி நாட்களில், ஒரு நாளைக்கு ரூ 75, போக்குவரத்து கட்டணமாக வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு:
தொலைபேசி: 044 22321021