சி.ஐ.எப்.என்.இ.டி., அட்மிஷன் | Kalvimalar - News

சி.ஐ.எப்.என்.இ.டி., அட்மிஷன்

எழுத்தின் அளவு :

கொச்சியில் உள்ள சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆப் பிசரிஷ் நாட்டிக்கல் அன்ட் இன்ஜினியரிங் டிரைனிங்(சி.ஐ.எப்.என்.இ.டி.,) கல்வி நிறுவனத்தில் 2016-17ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வழங்கப்படும் படிப்புகள்: பி.எப்.எஸ்சி.(நாட்டிக்கல் சயின்ஸ்), வி.என்.சி.(வேசில் நேவிகேட்டர்), மற்றும் எம்.எப்.சி.(மரைன் பிட்டர்),

கல்வித்தகுதி: நான்கு ஆண்டுகள் கொண்ட பி.எப்.எஸ்சி.(என்.எஸ்), படிப்புக்கு பிளஸ் 2வில் ஆங்கிலம், அறிவியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்களில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: அக்டோபர் 1, 2016 தேதி நிலவரப்படி 17 முதல் 20 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.

இரண்டு ஆண்டுகள் கொண்ட வி.என்.சி., மற்றும் எம்.எப்.சி., படிப்புகளுக்கு, 10ம் வகுப்பில் கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: ஆகஸ்ட் 1, 2016ம் தேதி நிலவரப்படி 16 முதல் 20வயதிற்குள் இருத்தல் வேண்டும்.

சேர்க்கை முறை: பொது நுழைவுத் தேர்வான சி.இ.டி., மற்றும் நேர்முகத் தேர்வு.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 27

மேலும் விவரங்களுக்கு: www.cifnet.nic.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us