வங்கி அதிகாரி ஆக வாய்ப்பு! | Kalvimalar - News

வங்கி அதிகாரி ஆக வாய்ப்பு!

எழுத்தின் அளவு :

இந்தியாவில், முன்னணி பொதுத் துறை வங்கியாக செயல்பட்டு வரும் ‘ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா’வில், ‘புரொபேஷனரி அதிகாரி’ ஆக பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு!

காலியிடங்கள்: 2,200 (பொது - 1028, ஓ.பி.சி.,- 590, எஸ்.சி.,- 351, எஸ்.டி.,- 231,)

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 4, 1986 மற்றும் ஏப்ரல் 1, 1995 ஆகிய இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். வயது வரம்பில் சலுகை உண்டு.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலை அல்லது கல்லூரிகளில் ஏதேனும் ஒரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கல்வி இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இத்தேவுக்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள் ஆகஸ்ட் 31, 2016ம் தேதிக்குள் அல்லது நேர்காணலுக்கு அழைக்கப்படும் போது, பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றை பெற்றிருக்க வேண்டும்.

மூன்று நிலைத் தேர்வுகள்
அகில இந்திய அளவில் நடைபெறும் வங்கி பொது எழுத்து தேர்வு மூலம் எஸ்.பி.ஐ., வங்கியில் பணி வாய்ப்பை பெற இயலாது. எஸ்.பி.ஐ., தனியே நடத்தும் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம், தகுதியான இளைஞர்கள் தேர்வு செய்யப்படுவதால், இத்தேர்வுக்கு தங்களை நன்கு திறம்பட தகுதிப்படுத்திக் கொள்வது நல்லது.

மூன்று நிலைகளை கொண்ட இத்தேர்வில், முதல் நிலைத் (பிரிலிமினரி) தேர்வானது ஆன்லைனில் ‘அப்ஜெக்டிவ்’ அடிப்படையில் நடத்தப்படும். 100 மதிப்பெண்களுக்கு, ஆங்கிலம், பகுத்தறியும் திறன் மற்றும் எண்ணியல் திறன் போன்றவை இத்தேர்வில் சோதிக்கப்படும். இத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் ‘மெயின்’ தேர்வுக்கு தகுதி பெறுவர்.

இரண்டாம் நிலைத் (மெயின்) தேர்வு ‘அப்ஜெக்டிவ்’ மற்றும் ‘டிஸ்கிரிப்டிவ்’ அடிப்படையில் 250 மதிப்பெண்களுக்கு, ரீசனிங் அன்ட் கம்ப்பியூட்டர் ஆப்டிடியூட், டேட்டா அனலைசஸ் அன்ட் இன்டர்பிரிடேஷன், பொது அறிவு (வங்கித்துறை சார்ந்து) மற்றும் ஆங்கில மொழியறிவு போன்ற பகுதிகளில் விண்ணப்பதாரர்களின் திறன்கள் சோதிக்கப்படும்.

மூன்றாம் நிலைத் தேர்வு, 50 மதிப்பெண்களுக்கு குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும். இந்த மூன்று நிலைத் தேர்வுகளில் விண்ணப்பதார்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் ‘மெரிட்’ முறையில் பணிகள் வழங்கப்படும்.

முன்தேர்வு பயிற்சி
எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினர்களுக்கு, ‘ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா’ சார்பில் சென்னை, கோவை மற்றும் மதுரை உள்ளிட்ட நகரங்களில் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

விண்ணப்பிக்கும் முறை:  www.sbi.co.in/careers என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 24

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us