எண்ணெய் நிறுவனத்தில் வாய்ப்பு | Kalvimalar - News

எண்ணெய் நிறுவனத்தில் வாய்ப்பு

எழுத்தின் அளவு :

இந்தியன் ஆயில் கார்ப்ரேஷன் நிறுவனத்தில் உள்ள டிரேடு அப்ரன்டிஸ் மற்றும் டெக்னீசியன் அப்ரன்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி: டிரேடு அப்ரன்டிஸ் பணிக்கு, முழு நேரக் கல்வி முறையில் இளநிலை பட்டப் படிப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம் போன்ற ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

டெக்னீசியன் அப்ரன்டிஸ் பணிக்கு, முழு நேரக் கல்வி முறையில் டிப்ளமோ பட்டப்படிப்பில், கெமிக்கல், எலக்ட்ரிகல், இன்ஸ்ட்ரூமென்டேஷன் போன்ற ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 20

மேலும் விவரங்களுக்கு: www.iocl.com

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us