ராணுவத்தில் வேலை | Kalvimalar - News

ராணுவத்தில் வேலை

எழுத்தின் அளவு :

கலை மற்றும் அறிவியல் துறையில் பட்டப்படிப்பு படித்த இளைஞர்களுக்கு, இந்திய இராணுவத்தில் சேவை செய்ய ஓர் அரிய வாய்ப்பு!

பணியிடங்கள்: அறிவியல் துறை- 392. கலை துறை -238.

கல்வித்தகுதிகள்: அறிவியல் துறைக்கு, பி.எஸ்சி.,/ பி.எஸ்சி(ஐ.டி).,/ பி.டெக்.,/ எம்.எஸ்சி., /எம்.சி.ஏ., /எம்.டெக்., போன்ற பட்டப்படிப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், உயிரியல், மின்னணுவியல் மற்றும் கணினி போன்ற ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கலை துறைக்கு, ஆங்கில இலக்கியம், இந்தி இலக்கியம், உருது இலக்கியம், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், பொருளியல், உளவியல், கணிதம் மற்றும் சமூகவியல் போன்ற ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் எம்.ஏ., / பி.ஏ., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, மருத்துவ பரிசோதனை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 15

மேலும் விவரங்களுக்கு: http://joinindianarmy.nic.in/

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us