மத்திய அரசின்கீழ் செயல்படும் ‘சென்டரல் இன்ஸ்டிடியூட் ஆப் பிளாஸ்டிக் இன்ஜினியரிங் அன்ட் டெக்னாலஜி’-யில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் வழங்கப்படும் உதவித் தொகையுடன் கூடிய இலவசப் பயிற்சிக்கு நீங்கள் தயாரா?
வயது வரம்பு: 18 வயது முதல் 35 வயது வரை
பயிற்சி பிரிவுகள்: பிளாஸ்டிக் புராசஸ்சிங்மெஷின் ஆப்ரேட்டர்(பி.பி.எம்.ஒ.,), இன்ஜக்சன் மோல்டிங் பிளாஸ்டிக் புராசசிங்(ஐ.எம்.எம்.ஒ.,), மெஷின் ஆப்ரேட்டர் பிளாஸ்டிக் புராசசிங்(எம்.ஒ-பி.பி.,), மெஷின் ஆப்ரேட்டர் பிளாஸ்டிக் எக்டர்ஷன்(எம்.ஒ-பி.இ.,).
பயிற்சி காலம்: 6 மாதங்கள்
கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 10ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாதவர்களும் இப்பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
* பிளாஸ்டிக் புராசசிங் டெக்னாலஜி (பி.பி.டி.,)
பயிற்சி காலம்: 6 மாதங்கள்
கல்வித்தகுதி: இளநிலை பட்டப் படிப்பில் கலை மற்றும் அறிவியல் போன்ற ஏதேனும் ஒரு பாடப் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* பிளாஸ்டிக் மோல்டு டிசைன் யுசிங் ஆட்டோகேட்
பயிற்சி காலம்: 4 மாதங்கள்
கல்வித்தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடப் பிரிவில் டிப்ளமோ அல்லது பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
* புரோக்ராமிங் அன்ட் மெஷினிங் ஆப்ரேசன்ஸ் ஆப் சி.என்.சி. மில்லிங், லேத் அன்ட் இ.டி.எம்.,
பயிற்சி காலம்: 3 மாதங்கள்
கல்வித்தகுதி: மெக்கானிக்கல் பிரிவில் ஐ.டி.ஐ., டிப்ளமோ, அல்லது பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
6 மாதங்கள் கொண்ட பயிற்சியில் முதல் 3 மாதங்கள் சிப்பெட் கல்வி மையத்திலும், அடுத்த 3 மாதங்கள் பிளாஸ்டிக் துறை சார்ந்த தொழில் நிறுவனங்களிலும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அந்நிறுவனத்தால் மூன்று மாதங்களுக்கான சம்பளமும் கிடைக்க வாய்ப்புள்ளது.
உதவித் தொகை மற்றும் தங்கும் வசதி: பயிற்சியினை முழுமையாக முடிக்கும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,500 முதல் 3,000ம் வரை உதவித் தொகை வழங்கப்படும். மேலும், சென்னை அல்லாது வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதிகள் இலவசமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்க தேவையானவை: கல்வித் தகுதி சான்றிதழ், கல்வி நிலைய மாற்றுச் சான்றிதழ், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்(5).
மேலும் விவரங்களுக்கு:
தொலைபேசி: 044 22254701-06