கணிதப் பட்டதாரிகளுக்கு உதவித்தொகை | Kalvimalar - News

கணிதப் பட்டதாரிகளுக்கு உதவித்தொகை

எழுத்தின் அளவு :

கணிதப் பாடத்தில் இளநிலை பட்டம் பெற்ற மாணவர்களுக்கு மத்திய அணுசக்தித் துறையின்கீழ் இயங்கும் நேஷனல் போர்டு ஆப் மேத்மேட்டிக்ஸ் முதுநிலைப் பட்டப்படிப்பு படிக்க கல்வி உதவித்தொகை வழங்குகிறது. தகுதிகள்: பிஏ, பி.எஸ்.சி பட்டப் படிப்புகளில் முதல் வகுப்பிலும், பி.எஸ்.சி ஆனர்ஸ் படிப்பை முடித்தவர்கள் குறைந்தது இரண்டாம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு: உதவித்தொகையை பெற, செப்டம்பர் 19-ஆம் தேதி சென்னை, பெங்களூரு, கொச்சி, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டும். அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். குறிப்பு: NBHM MA/Msc Scholarship என்று விண்ணப்ப உறையில் குறிப்பிட்டு ஜூலை 31ம் தேதிக்குள் கிடைக்கும்படி அணுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு: www.nbhm.dae.gov.in , www.imsc.res.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us