வெளிநாடுகளில் மருத்துவம் படித்தோர் எழுதவேண்டிய தேர்வு | Kalvimalar - News

வெளிநாடுகளில் மருத்துவம் படித்தோர் எழுதவேண்டிய தேர்வு

எழுத்தின் அளவு :

வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பு முடித்தவர்கள், இந்திய மருத்துவக் கவுன்சிலின் அங்கீகாரம் பெற விரும்பினால், அதற்கான ஒரு ஸ்கிரீனிங் தேர்வை எழுத வேண்டும் என்பதை நாம் அறிவோம்.

FMGE(Foreign Medical Graduate Examination) என்று சுருக்கமாக அழைக்கப்படும் அத்தேர்வு, ஜுன் மாதம் 29 முதல் 30ம் தேதி வரை நடைபெறுகிறது.

இத்தேர்வு பல்வேறு தேர்வு மையங்களில், நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. இது கணினி அடிப்படையிலான தேர்வு மற்றும் 300 multiple choice கேள்விகளைக் கொண்டது.

இத்தேர்வுக்கு, ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தலுக்கான கடைசித் தேதி - ஜுன் 10.

கட்டணம், பாடத்திட்டம், தகுதி உள்ளிட்ட பல்வேறு விபரங்களை அறிய www.natboard.edu.in/fmge

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us