ஊக்கத்தொகையுடன் கூடிய 11 மாத பயிற்சிக்கான விண்ணப்பங்கள் | Kalvimalar - News

ஊக்கத்தொகையுடன் கூடிய 11 மாத பயிற்சிக்கான விண்ணப்பங்கள்

எழுத்தின் அளவு :

சென்னை: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான ஊக்கத் தொகையுடன் கூடிய, 11 மாத பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

மத்திய அரசின் தொழிலாளர், வேலைவாய்ப்பு பிரிவின் கீழ் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான பயிற்சி, வழிகாட்டு மையம், சென்னை, சாந்தோம் நெடுஞ்சாலை, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய கட்டடத்தில் இயங்கி வருகிறது.

அங்கு, ஜூலை, 1ம் தேதி, 11 மாத புதிய பயிற்சி துவங்குகிறது. பொது அறிவு, கணினி அறிவு, ஆங்கில பயிற்சி, தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சி அளிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு ஊக்கத் தொகையாக மாதம், 500 ரூபாய் வழங்கப்படும்.

வேலைவாய்ப்பு மையத்தில் பதிவுசெய்துள்ள, பிளஸ் 2, அதற்கு மேல் கல்வித் தகுதி பெற்றவர்கள், இந்த ஆண்டு, ஜூன் 30ம் தேதியன்று, 18ல் இருந்து, 27 வயதை கொண்ட ஆதிதிராவிட, பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பங்கள், கடந்த 22ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. அடுத்த மாதம் 19ம் தேதி வரை, மையத்தில் வழங்கப்படும். விண்ணப்பத்துடன் கல்வி, ஜாதி சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், ஆதார் அட்டை (இருந்தால்) வேலைவாய்ப்பு பதிவு அட்டை, பாஸ்போர்ட் புகைப்படங்கள் இரண்டு ஆகியவற்றை இணைக்க வேண்டும். ஜூன் 19ம் தேதி விண்ணப்பிக்க இறுதி நாள். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, அடுத்த மாதம் 23, 24ம் தேதிகளில் நேர்காணல் நடத்தப்படும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us