ஏர் இந்தியா லிமிடெட் நிறுவன பணி வாய்ப்புகள் | Kalvimalar - News

ஏர் இந்தியா லிமிடெட் நிறுவன பணி வாய்ப்புகள்

எழுத்தின் அளவு :

ஏர் இந்தியா லிமிடெட் நிறுவனம், மொத்தம் 435 Trainee Cabin Crew பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளது. விருப்பமுள்ள இளம் இந்திய இளைஞர்களும், பெண்களும், இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய 4 பிராந்தியங்களிலும், மேற்கண்ட 435 பேரும், விருப்ப அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள். இடஒதுக்கீடு ரீதியாக ஆண், பெண் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

5 ஆண்டு காலகட்டத்திற்கு, இந்தப் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படவுள்ளன. எதிர்கால பணிகளுக்கும் வாய்ப்புண்டு. தென் பிராந்தியத்திற்காக விண்ணப்பிக்கும் நபர்கள், சென்னை, பெங்களூர், ஐதராபாத் மற்றும் கோழிக்கோடு ஆகிய இடங்களில், தேவைக்கேற்ப பணியமர்த்தப்படுவார்கள்.

ஒருவர் 1 பிராந்தியத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இல்லையெனில், விண்ணப்பம் நிராகரிக்கப்படும். விண்ணப்பதாரர்கள், 18 முதல் 27 வயதுக்குள்ளாக இருக்க வேண்டும். விதிமுறைகளின்படி, வயதுவரம்பு சலுகையும் உண்டு.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் கடைசித் தேதி - ஏப்ரல் 14.

விரிவான தகவல்களுக்கு http://careers.airindia.in/Default.aspx

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us