சென்னை: காலணி டிசைன் மற்றும் டெவலப்மென்ட் கல்வி நிறுவனத்தில்(FDDI), 2015ம் கல்வியாண்டில் டிசைன் தொடர்பான இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
சென்னை, நொய்டா, குணா, கொல்கத்தா, ரோடக், ஜோத்பூர், சிந்த்வாரா மற்றும் புர்சாட்கன்ஜ் ஆகிய இடங்களிலுள்ள FDDI வளாகங்களில் இப்படிப்புகள் வழங்கப்படவுள்ளன.
விண்ணப்பக் கட்டணம் ரூ.500. நுழைவுத்தேர்வின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும். அதேசமயம், சில தகுதிகளின் அடிப்படையில், நுழைவுத் தேர்விலிருந்து விலக்கும் உண்டு. உதவித்தொகை திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி - மே 15.
நுழைவுத்தேர்வு நடைபெறும் தேதிகள் - ஜுன் 12, 13 மற்றும் 14.
அதன் முடிவுகள் வெளியாகும் நாள் - ஜுன் 30.
விரிவான அனைத்து விபரங்களையும் அறிய http://www.fddiindia.com/admission-new/downloads/Prospectus.pdf