சர்வதேச உதவித்தொகைகளுக்கான விண்ணப்பங்களை கோரும் ஐ.சி.எம்.ஆர். | Kalvimalar - News

சர்வதேச உதவித்தொகைகளுக்கான விண்ணப்பங்களை கோரும் ஐ.சி.எம்.ஆர்.

எழுத்தின் அளவு :

மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்தியன் கவுன்சில்(ICMR), சர்வதேச உதவித்தொகைகளைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை, இந்திய பயோமெடிக்கல் விஞ்ஞானிகளிடமிருந்து கோருகிறது. இந்த உதவித்தொகை 2015-16ம் ஆண்டிற்கானது.

இளம் விஞ்ஞானிகளுக்கு 12 உதவித்தொகைகளும், சீனியர் விஞ்ஞானிகளுக்கு 6 உதவித்தொகைகளும் வழங்கப்படுகின்றன.

கால அளவு: இளம் விஞ்ஞானிகளுக்கு 3 முதல் 6 மாத காலம் வரையும், மூத்த விஞ்ஞானிகளுக்கு 10 முதல் 15 நாட்கள் வரையும், மேற்கண்ட உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதற்கு விண்ணப்பிக்கும் இளம் விஞ்ஞானிகளுக்கு அதிகபட்சம் 45 வயது வரையும், மூத்தவர்களுக்கு 57 வயது வரையும் இருக்கலாம்.

நிதியுதவி விபரம்

இளைய விஞ்ஞானிகளுக்கு...

மாதத்திற்கு 3,000 அமெரிக்க டாலர்கள் உதவி, நேரிடக்கூடிய செலவினங்களுக்கு ரூ.20,000 உதவி மற்றும் திரும்பி வருவதற்கான எகனாமிக் வகுப்பு விமான டிக்கெட் போன்றவை.

மூத்த விஞ்ஞானிகளுக்கு...

ஒரு நாளைக்கு 200 அமெரிக்க டாலர்கள், நேரிடக்கூடிய செலவினங்களுக்கு ரூ.20,000 உதவி மற்றும் திரும்பி வருதலுக்கான எகனாமிக் வகுப்பு விமானக் கட்டணம் போன்றவை.

மேற்கண்ட பிரிவினருக்கான தனித்தனி தகுதி நிலைகள் உண்டு மற்றும் இந்த உதவித்தொகையைப் பெறுவதற்கு செய்ய வேண்டிய பல செயல்பாடுகளும் உண்டு.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித்தேதி - மார்ச் 10.

விரிவான தகவல்களுக்கு www.icmr.nic.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us