புகழ்பெற்ற பெட்ரோலியம் கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ. சேர... | Kalvimalar - News

புகழ்பெற்ற பெட்ரோலியம் கல்வி நிறுவனத்தில் எம்.பி.ஏ. சேர...

எழுத்தின் அளவு :

நொய்டாவிலுள்ள ராஜீவ்காந்தி இன்ஸ்டிட்யூட் ஆப் பெட்ரோலியம் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தின் மேலாண்மைத் துறை, 2 ஆண்டு எம்.பி.ஏ. படிப்பை 2015-17ம் கல்வியாண்டில் வழங்கவுள்ளது.

பி.இ. அல்லது பி.டெக். பட்டப் படிப்போடு, செல்லத்தக்க CAT/GMAT 2014 அல்லது XAT 2015 தேர்வு மதிப்பெண்களைக் கொண்டிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

முறையான கல்வித் தகுதிகளைக் கொண்டிருந்து, கம்பெனிகளால் ஸ்பான்சர் செய்யப்படும் நபர்கள், படிப்பிற்கு பிறகான 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருப்பின், அவர்கள், CAT/GMAT/XAT போன்ற தேர்வுகளில் ஒன்றை கட்டாயம் எழுதியிருக்க வேண்டிய அவசியமில்லை.

விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கடைசித் தேதி - மார்ச் 31.

விரிவான விபரங்களுக்கு www.rgipt.ac.in.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us