டில்லி டெக்னாலஜி பல்கலையின் எம்.பி.ஏ. படிப்பு | Kalvimalar - News

டில்லி டெக்னாலஜி பல்கலையின் எம்.பி.ஏ. படிப்பு

எழுத்தின் அளவு :

டில்லி டெக்னாலஜிகல் பல்கலையைச் சேர்ந்த டில்லி ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட்(DSM), 2 ஆண்டு முழுநேர எம்.பி.ஏ. படிப்பை வழங்குகிறது. பல்வேறு பிரிவுகளில், இப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.

தகுதிக்கான படிப்பில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண் பெற்றவர்கள், இதற்கு விண்ணப்பிக்கலாம். அதேசமயம், OBC பிரிவினருக்கு 5%ம், SC/ST பிரிவினருக்கு 10%ம் மதிப்பெண் சலுகை வழங்கப்படும்.

இப்படிப்பிற்கான மொத்த இடங்கள் 91. மாணவர் சேர்க்கையில், இடஒதுக்கீட்டுக் கொள்கை பின்பற்றப்படும்.

CAT - 2014 தேர்வு மற்றும் தகுதிக்கான படிப்பில் ஒருவர் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள், நேர்முகத் தேர்வு மற்றும் குழு கலந்தாய்வு ஆகியவற்றுக்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பத்தை, அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பித்தலுக்கான கடைசித் தேதி - பிப்ரவரி 13, 2015.

விரிவான அனைத்து தகவல்களுக்கும் http://www.dce.edu/

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us