பாரதியார் பல்கலையில் தொலைநிலை முறையிலான பி.எட். படிப்பு | Kalvimalar - News

பாரதியார் பல்கலையில் தொலைநிலை முறையிலான பி.எட். படிப்பு

எழுத்தின் அளவு :

கோவை: பாரதியார் பல்கலைக்கழகத்தில், தொலைநிலைக் கல்வி முறையில், பி.எட்., படிப்பிற்கான சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. 2015-17ம் கல்வியாண்டிற்காக இந்த சேர்க்கை நடத்தப்படவுள்ளது.

குறைந்தபட்சம் 2 ஆண்டுகள், ஆசிரியப் பணி அனுபவம் உள்ளவர்கள், இப்படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை இணையத்திலோ அல்லது நேரிலோ பெறலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.500.

நுழைவுத்தேர்வு மற்றும் மாநில அரசின் இடஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெறும். இப்படிப்பு மொத்தம் 2 ஆண்டுகள் காலஅளவைக் கொண்டது.

விண்ணப்பம் சமர்ப்பித்தலுக்கான கடைசி நாள் - பிப்ரவரி 28, 2015.

நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள் - மார்ச் 29, 2015.

விரிவான அனைத்து விபரங்களுக்கும் http://www.b-u.ac.in/advt/advt.pdf

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us