போஸ்ட் டாக்டோரல் உதவித்தொகை வழங்கும் ஐ.சி.எச்.ஆர். | Kalvimalar - News

போஸ்ட் டாக்டோரல் உதவித்தொகை வழங்கும் ஐ.சி.எச்.ஆர்.

எழுத்தின் அளவு :

இந்தியன் கவுன்சில் ஆப் ஹிஸ்டாரிகல் ரிசர்ச்(ICHR), போஸ்ட் டாக்டோரல்(பொது) உதவித்தொகையை வழங்குகிறது.

இந்த உதவித்தொகையைப் பெறுவதற்கு, சரியான நபர்களைத் தேர்வு செய்வதற்கான தகுதித் தேர்வு நடத்தப்படும்.

இந்த உதவித்தொகை திட்டத்தில், மாதம் ரூ.28,000 வழங்கப்படுவதுடன், ஆண்டு செலவினமாக ரூ.20,000 -ம் வழங்கப்படுகிறது. மொத்தம் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படவுள்ள இந்த உதவித்தொகை, தேவைப்பட்டால், ஆராய்ச்சி புராஜெக்ட் கமிட்டியின் பரிந்துரைக்கேற்ப, கூடுதலாக 1 ஆண்டிற்கு நீட்டிக்கப்படும் .

2014-15ம் ஆண்டிற்கு, அதிகபட்சமாக 10 போஸ்ட் டாக்டோரல் உதவித்தொகைகள் வழங்கப்படுகின்றன.

இதற்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் கடைசித் தேதி - டிசம்பர் 10.

print out எடுத்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கடைசித் தேதி - டிசம்பர் 22.

தகுதித்தேர்வு நடைபெறும் தேதி - பிப்ரவரி 8

வரலாறு அல்லது தொடர்புடைய பாடங்களில், பிஎச்.டி. பெற்றவர்கள் மட்டுமே, இந்த உதவித்தொகையைப் பெறுவதற்கு தகுதியானவர்கள்.

விரிவான தகவல்களைப் பெற http://ichr.ac.in/

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us