தொழில்நுட்பத்திற்கான ராணுவ கல்வி நிறுவன படிப்புகள் | Kalvimalar - News

தொழில்நுட்பத்திற்கான ராணுவ கல்வி நிறுவன படிப்புகள்

எழுத்தின் அளவு :

புனேவிலுள்ள தொழில்நுட்பத்திற்கான ராணுவ கல்வி நிறுவனம்(AIT - Pune), வெவ்வேறு துறைகளில், பொறியியல் படிப்பிற்கான சேர்க்கையை வழங்கவுள்ளது. 2015ம் ஆண்டு ஜுலை மாதம் இப்படிப்புகள் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 300 இடங்களில், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பிரிவுக்கு 120 இடங்களும், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி ஆகிய பிரிவுகளுக்கு தலா 60 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

ராணுவத்தில் பணிபுரியும் அல்லது ஓய்வுபெற்றவர்களின் பிள்ளைகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். அதேசமயம், பெற்றோர், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் ராணுவத்தில் பணிபுரிந்திருக்க வேண்டும்.

2015ம் ஆண்டு JEE Main தேர்வில் பெற்ற Rank அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது. இக்கல்வி நிறுவனத்தில் சேர்வதற்கு ஆர்வமுள்ளோர், 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் JEE Main தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

விரிவான அனைத்து விபரங்களுக்கும் http://www.aitpune.com/default.asp

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us