பி.எஸ்சி., பார்மசி படித்து வருகிறேன். எனக்கு எங்கு வேலை கிடைக்கும்? | Kalvimalar - News

பி.எஸ்சி., பார்மசி படித்து வருகிறேன். எனக்கு எங்கு வேலை கிடைக்கும்?டிசம்பர் 26,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

இலக்கில்லாத பயணம் செய்யும் மாணவர்களுள் ஒருவராக நீங்கள் இருக்கக் கூடாது. ஆனால் நீங்கள் படிக்கும் படிப்பின் அடிப்படையில் உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதை அறியுங்கள்.

பி.எஸ்சி., படித்து முடித்தவுடனேயே பெரிய புகழ் பெற்ற மருத்துவமனைகளின் பார்மசிக்களில் வேலை கிடைக்கும். பிற ரீடெயில் மருந்தகங்களிலும் வேலை பெறலாம். மருந்துகளைப் பற்றி அறிந்தவர் என்பதால், இந்தத் தகுதியைப் பெற்றபின், நீங்கள் மெடிக்கல் ரெப்ரசன்டேடிவாகவும் பணி புரியலாம். ஹோல்சேல் டீலர்களிடமும் உங்களுக்கான வேலைகள் இருக்கின்றன. காஸ்மெடிக்ஸ் தயாரிப்பு நிறுவனங்களிலும் பணி வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கிறது.

படிப்பை விட உங்களது துறையில் நீங்கள் பெற்றிருக்கும் திறன்கள் தான் மிக முக்கியம். படிப்பு முடிந்தவுடனேயே வேலை ஒன்றில் சேர முயற்சிக்கவும். ஏனெனில் நடைமுறைப் பணி செய்யும் போது தான் திறன்களை நீங்கள் வளர்த்துக் கொள்ள முடியும். நல்ல நம்பிக்கையுடன் உங்களது படிப்பை முடியுங்கள். வாய்ப்புகள் தானாக உங்களைத் தேடி வரும்.

Search this Site

மேலும்

Copyright © 2013 www.kalvimalar.com.All rights reserved | Contact us