பிட்ஸ்-பிலானியில் எம்.பி.ஏ. சேர ஆசையா? | Kalvimalar - News

பிட்ஸ்-பிலானியில் எம்.பி.ஏ. சேர ஆசையா?

எழுத்தின் அளவு :

பிலானி: 2015 - 16ம் கல்வியாண்டில், எம்.பி.ஏ. படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், புகழ்பெற்ற பிர்லா இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி அன்ட் சயின்ஸ்(BITS) கல்வி நிறுவனத்தால் வரவேற்கப்படுகின்றன.

அங்கீகரிக்கப்பட்ட ஒரு பல்கலையில், பி.இ. அல்லது பி.டெக். பட்டமோ அல்லது முதுநிலை பொறியியல் பட்டமோ பெற்றிருப்பதோடு, குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களையும் கொண்டிருக்க வேண்டும். படிப்பில் சேர்வோருக்கான உதவித்தொகை திட்டமும் உண்டு.

CAT 2014 தேர்வு அல்லது GMAT தேர்வு மதிப்பெண்களின் மூலம் மாணவர்கள் shortlist செய்யப்பட்டு, குழு கலந்தாய்வு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பங்களை ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் வந்துசேர வேண்டிய கடைசித் தேதி - 27 ஜனவரி, 2015.

மேலதிக விபரங்களுக்கு http://www.bits-pilani.ac.in/

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us