கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கும் வேலை வாய்ப்புகள்! | Kalvimalar - News

கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கும் வேலை வாய்ப்புகள்!

எழுத்தின் அளவு :

கர்நாடக உயர்நீதிமன்றத்தில், சாப்ட்வேர் டெக்னீசியன் என்ற அந்தஸ்தில், குரூப் - ஏ பிரிவில், மொத்தம் 32 காலிப் பணியிடங்கள் உள்ளன. இப்பணியில் சேர விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், தொடர்புடைய படிப்புகள் ஏதேனும் ஒன்றை, குறைந்தபட்சம் முதல் வகுப்பு மதிப்பெண்களுடன், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் நிறைவு செய்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யும் முறை

விண்ணப்பதாரர்களுக்கு, 70 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வும், 30 மதிப்பெண்களுக்கு வாய்மொழித் தேர்வும்(viva voce) நடத்தப்படும்.
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 வயதை அடைந்திருக்க வேண்டும்.

ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் கடைசித் தேதி - நவம்பர் 20.

விரிவான தகவல்களை அறிய http://karnatakajudiciary.kar.nic.in/recruitment.asp

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us