இசை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி நாள் | Kalvimalar - News

இசை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசி நாள்

எழுத்தின் அளவு :

திருப்பரங்குன்றம்: மதுரை பசுமலை அரசு இசைக் கல்லூரியில் அரசு உதவி தொகையுடன் இசை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, ஜூலை 31 கடைசி நாள் என கல்லூரி (பொறுப்பு) முதல்வர் சுப்புலட்சுமி தெரிவித்தார்.

அவரது அறிக்கை: கல்லூரியில் 3 ஆண்டு இசைப்பயிற்சிக்குரிய பட்டய வகுப்புகளாக குரலிசை, வயலின், வீணை, புல்லாங்குழல், மிருதங்கம், பரதநாட்டியம், தவில், நாதஸ்வரம், நாட்டுப்புறக்கலை படிப்புகளுக்கு 8ம் வகுப்பு தேர்ச்சியும், 13 முதல் 18 வயது வரை உள்ளவர்கள், ஓராண்டுகால இசை ஆசிரியர் பட்டயப் பயிற்சி படிப்பிற்கு, இசைக்கலைமணி பட்டயம் தேர்ச்சியுடன் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது இளங்கலை பி.ஏ. மியூசிக்கில் தேர்ச்சி பெற்ற 15 முதல் 25 வயதிற்கு உட்பட்டவர்கள் தகுதியானவர்கள்.

புதிய பட்டப்படிப்பு இசை மற்றும் நுண்கலை பல்கலையுடன், குரலிசை 3 ஆண்டுகள் இளங்கலை பட்டப்படிப்பு (பி.ஏ., மியூசிக்) இந்த கல்வியாண்டு முதல் தொடங்கப்பட உள்ளது. 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 17 முதல் 22 வயதுடைவர்கள் தகுதியானவர்கள்.

பட்டயம், பட்டப்படிப்பில் பயிலும் மாணவர்களுக்கு அரசின் கல்வி உதவித் தொகையாக மாதம் ரூ.500 வழங்கப்படுகிறது. தவிர அரசின் பிற சலுகைகளும் பொருந்தும். ஜூலை 31 வரை சேர்க்கை நடக்கிறது. விரும்புகிறவர்கள் நேரில் வரலாம். விபரங்களுக்கு 93807 84304ல் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us