திறந்தநிலை பள்ளி தேசிய கல்வி நிறுவன மாணவர் சேர்க்கை | Kalvimalar - News

திறந்தநிலை பள்ளி தேசிய கல்வி நிறுவன மாணவர் சேர்க்கை

எழுத்தின் அளவு :

நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் ஓபன் ஸ்கூலிங், உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வியை மேற்கொள்ள அழைக்கிறது.

NIOS என்று சுருக்கமான அழைக்கப்படும் இந்த கல்வி நிறுவனத்தில், உயர்நிலைக் கல்வியில் சேர, குறைந்தபட்சம் 14 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் மற்றும் 8ம் வகுப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது Self certificate தகுதி இருக்க வேண்டும்.

மேல்நிலைப் படிப்பில் சேர, 15 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட முறையில் 10ம் வகுப்பை நிறைவு செய்திருக்க வேண்டும்.

இதில் சேர்க்கைப் பெறுவதற்கான கடைசித் தேதி(அபராதம் இல்லாமல்) ஜுலை 31.

அருகிலுள்ள NIOS அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள், பிராந்திய மையங்கள், துணை மையங்கள் மற்றும் அனைத்து பொது சேவை மையங்கள் ஆகியவற்றின் மூலம் சேர்க்கை பெறலாம். ஆனால், அங்கீகாரமற்ற மையங்களின் மூலம் சேர்க்கைப் பெற்றால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. எனவே, கவனமுடன் செயல்பட வேண்டும்.

விரிவான அனைத்து தகவல்களுக்கும் www.nios.ac.in.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us