பயோடெக்னாலஜி தொடர்பான ஓராண்டு படிப்புகள் | Kalvimalar - News

பயோடெக்னாலஜி தொடர்பான ஓராண்டு படிப்புகள்

எழுத்தின் அளவு :

பெங்களூர்: பயோடெக்னாலஜி தொடர்பான ஓராண்டு முதுநிலை டிப்ளமோ படிப்புகளை மேற்கொள்ள, ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்படிப்புகள், பணி தொடர்பானவை. இந்திய அரசு மற்றும் ABLE அமைப்புடன் இணைந்து, கர்நாடக அரசால் இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. Biotechnology Finishing Schools மூலம் இப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. இப்படிப்பு, கர்நாடக மாநிலம் முழுவதுமுள்ள 12 புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் உள்ள 8 துறைகளை உள்ளடக்கியதாகும்.

ஒரு ஆண்டு படிப்பில், 6 மாதம் அகடமிக் பயிற்சியும், 6 மாதம் தொழில்துறை பயிற்சியும் உண்டு.

படிப்பை மேற்கொள்ள தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு, மாதம் ரூ.10,000 உதவித்தொகையாக வழங்கப்படும். இந்திய அரசின் பயோடெக்னாலஜி துறையால் இந்த தொகை வழங்கப்படுகிறது.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் இறுதி தேதி ஜுலை 30. உடனே முந்துங்கள்.

விரிவான அனைத்து விபரங்களுக்கும் www.btfskarnataka.org.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us