தஞ்சை தமிழ் பல்கலையின் ஓராண்டு டிப்ளமோ படிப்புகள் | Kalvimalar - News

தஞ்சை தமிழ் பல்கலையின் ஓராண்டு டிப்ளமோ படிப்புகள்

எழுத்தின் அளவு :

மதுரை: தஞ்சை தமிழ்ப் பல்கலையில் ஜோதிடவியல், மரபு வழி தமிழ் மருத்துவம், மருத்துவ மூலிகை அழகுக்கலை குறித்த ஓராண்டு டிப்ளமோ படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மரபுவழி தமிழ் மருத்துவப் படிப்பில் தமிழ் மருத்துவம் பற்றி அறிமுகம், அடிப்படை கல்வி, மரபுவழி தமிழ் மருந்துகளின் பயன்பாடு, அறிவியல் திறன் ஆகிய பாடப் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படும். இப்படிப்பிற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஜோதிடவியல் படிப்பில் ராசி மண்டலம், கோள்கள், ராசி, பஞ்சாங்கம், கோள்களின் பிரிவு, வழியறிதல், நல்லநேரம், தசபுத்தி, திருமணப்பொருத்தம், ஜாதகம் கணித்தல் பாடப்பிரிவுகள் உண்டு. இதற்கு பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

மருத்துவ மூலிகை அழகுக்கலை படிப்பிற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதும். கல்வித்தகுதி, ஜாதி, மாற்றுச் சான்றிதழ் நகல், மூன்று போட்டோக்களுடன் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: தமிழ்ப் பல்கலை மதுரை மையம், 10, கல் பாலம் ரோடு, கோரிப்பாளையம், மதுரை. 36, மேல வடம் போக்கி தெரு, மதுரை. போன்:90809 14232.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us