திருவாரூர்: கம்யூனிட்டி கல்லூரியின் கீழ், மூன்று வகையான சான்றிதழ் படிப்புகளை, திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகம் வழங்குகிறது. இந்தப் படிப்புகள் 6 மாத கால அளவைக் கொண்டவை.
படிப்புகள்
* Para Legal பிரிவில் சான்றிதழ் படிப்பு
* நீர் மேலாண்மை பிரிவில் சான்றிதழ் படிப்பு
* அடிப்படை கணினி அறிவியலில் சான்றிதழ் படிப்பு
இப்படிப்புகள், வேறு பல கல்வி நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து வழங்கப்படுகிறது.
www.cutn.ac.in என்ற பல்கலை இணையதளம் சென்று விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆகஸ்ட் 16ம் தேதிக்குள் விண்ணப்பங்களை பூர்த்திசெய்து அனுப்பிவிட வேண்டும். இணையதளத்தில் தேவையான அனைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம்.