சென்னை: பரதநாட்டியம் மற்றும் ரித்மாலஜி துறைகளில், எம்.ஏ. படிப்பை சென்னைப் பல்கலை வழங்குகிறது.
இப்படிப்புகளை, அப்பல்கலையின் இந்திய இசைத் துறை வழங்குகிறது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதிகள்
எம்.ஏ. பரதநாட்டியம் - பி.ஏ., பி.எஸ்சி., அல்லது பி.காம்., ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அங்கீகரிக்கப்பட்ட முறையில் படித்திருக்க வேண்டும். மேலும், சென்னைப் பல்கலையால் அங்கீகரிக்கத்தக்க முறையில், நடனத்தில், டிப்ளமோ பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் கற்பித்தல் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
எம்.ஏ. ரித்மாலஜி - சென்னைப் பல்கலையிடமிருந்து ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் கற்பித்தல் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்ப படிவத்தை, நேரில் வந்தோ அல்லது தபால் மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம். அதேசமயம், ஆன்லைன் மூலமும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்ப கட்டணம் ரூ.200.
விண்ணப்பிக்கும் கடைசித் தேதி - ஆகஸ்ட் 30. அனைத்து விபரங்களுக்கும் www.unom.ac.in.