பி.பி.எம்., படித்துள்ள எனக்கு இப்படிப்புக்கான வேலை கிடைக்குமா? | Kalvimalar - News

பி.பி.எம்., படித்துள்ள எனக்கு இப்படிப்புக்கான வேலை கிடைக்குமா? டிசம்பர் 06,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

எந்த படிப்புக்கும் வெறும் தகுதிக்காக மட்டுமே வேலைகள் கிடைப்பதில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள். தகுதியை விட உங்களது அடிப்படையான திறன்கள் தான் மிக முக்கியமாக வேலை தரும் நிறுவனங்களால் கருதப்படுகின்றன. எனவே பி.பி. எம்., படித்திருப்பதால் எந்த வேலையும் உங்களுக்குக் கிடைக்காது.

தற்போது அதிக எண்ணிக்கையில் பாங்க் பணி வாய்ப்புகள் அறிவிக்கப்படுகின்றன. இவற்றுக்கு விண்ணப்பித்து, உடனேயே தேர்வுக்காக கடுமையாக தயாராகத் துவங்குங்கள். மேலே படிக்க முடியும் என்றால் கேட், மேட் தேர்வுகள் மூலமாக எம்.பி.ஏ., படிப்பில் நல்ல கல்வி நிறுவனத்தில் சேரவும்.

அதையும் ஏதோ ஒரு பட்டப்படிப்பு போல படிக்காமால், சிறப்பான மேனேஜ்மென்ட் திறன்களை நீங்கள் பெறும் விதத்தில் படித்தால் மட்டுமே அப் படிப்புக்காக வேலை கிடைக்கலாம். எனவே மாயைகளில் வாழாமல் உடனே ஆக்கபூர்வமான செயல்பாடுகளை துவங்குங்கள்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us