டூன் பல்கலை வழங்கும் படிப்புகள் | Kalvimalar - News

டூன் பல்கலை வழங்கும் படிப்புகள்

எழுத்தின் அளவு :

டூன் பல்கலைக்கழகம், தான் வழங்கும் பல்வேறு படிப்புகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்ப படிவங்கள் மார்ச் 26ம் தேதி வரை கிடைக்கும்.

5 ஆண்டு ஒருங்கிணைந்த முதுநிலைப் படிப்புகள், 2 ஆண்டு முதுநிலை படிப்புகள், எம்.பில் மற்றும் பிஎச்.டி., படிப்புகள், முதுநிலை டிப்ளமோ படிப்புகள் ஆகிய நிலைகளில், பல்வேறான படிப்புகள் வழங்கப்பட உள்ளன.

விண்ணப்பங்கள், ஏப்ரல் 21 முதல் மே 26 வரை வழங்கப்படுகின்றன.
விண்ணப்பித்தலுக்கான கடைசித் தேதி ஜுன் 2.
எம்.பி.ஏ., படிப்பிற்கு விண்ணப்பிக்கும் கடைசித் தேதி ஜுன் 17.
நுழைவுத்தேர்வு நடைபெறும் தேதி ஜுன் 8.

விருப்பமுள்ளோர் www.doonuniversity.ac.in என்ற அதிகாரப்பூர்வ வலைதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us