புதுச்சேரியில் இயங்கி வரும் பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் முதுநிலை மற்றும் ஆய்வுப் படிப்புகளுக்கான சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும் 5 வருட ஒருங்கிணைந்த முதுநிலை படிப்புகள், ஒருங்கிணைந்த முதுநிலை மற்றும் ஆய்வுப் படிப்புகள் போன்றவையும் இதில் அடங்கும்.
விண்ணப்பங்களை இணையதளம் வழியாக மட்டுமே அனுப்ப வேண்டும்.
மாணவர் சேர்க்கை இணையதள வழி நுழைவுத் தேர்வின் மூலம் நடைபெறும்.
வெளிநாட்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள்: 15 மே 2014.
நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள்: 30, 31 மே மற்றும் 01 ஜூன் 2014.
மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.pondiuni.edu.in என்ற இணையதளத்தைக் காணவும்.