3 ஆண்டு பி.காம்., ஹானர்ஸ் படிப்பு மற்றும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., படிப்பு மற்றும் பி.ஏ., ஹானர்ஸ் படிப்பு உள்ளிட்ட பல்வேறு படிப்புகளில் சேர, தகுதியுள்ள மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது இந்தூரிலுள்ள தேவி அகில்யா விஷ்வவித்யாலயா கல்வி நிறுவனம்.
ஒவ்வொரு படிப்பிற்கும் தனித்தனி தகுதிநிலைகள் உள்ளன. www.dauniv.ac.in/ என்ற வலைதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் மற்றும் விரிவான விபரங்களை அறியலாம்.
விண்ணப்பக் கட்டணம் ரூ.1050. ஆன்லைனில் விண்ணப்பித்தலுக்கான கடைசித் தேதி மே 20. நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள் மே 29.