பிலானி: BITSAT 2014 தேர்வை எழுதுவதற்கான அட்மிட் கார்டுகள், பிட்ஸ் - பிலானியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கின்றன. தேர்வெழுதுவோர், தங்களின் விண்ணப்ப எண், பாலினம் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை குறிப்பிட்ட அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஏப்ரல் 30ம் தேதி வரை அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்யலாம். BITSAT 2014 தேர்வு மே 14 முதல் ஜுன் 1ம் தேதி வரை நடைபெறும்.
www.projects.bitsadmission.com/bitsat/bitsat2014htdwn/default.aspx என்ற வலைதளம் சென்று பதிவிறக்கம் செய்யவும். பதிவிறக்கம் செய்தபிறகு, அதில் உங்களின் கையெழுத்து மற்றும் அவசர உதவிக்கான தொலைபேசி எண் ஆகியவற்றை சேர்க்கவும். மேலும், கேட்டிருக்கும் இடத்தில் உங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தையும் ஒட்ட வேண்டும்.