ஸ்ரீபெரும்புதூர்: இளைஞர் மேம்பாட்டிற்கான ராஜீவ்காந்தி தேசிய கல்வி நிறுவனம், இளைஞர் முன்னேற்றம், கேரியல் கவுன்சிலிங், உள்ளாட்சி நிர்வாகம், பாலினம் தொடர்பான படிப்புகள், வாழ்க்கைத் திறன்கள் கல்வி மற்றும் மேம்பாட்டு பயிற்சி படிப்புகள் ஆகிய பிரிவுகளில், 2 ஆண்டு எம்.ஏ., படிப்புகளை வழங்குகிறது.
ஒரு அங்கீகரிக்கப்பட்ட இளநிலைப் படிப்பில் குறைந்தபட்சம் 45% மதிப்பெண் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். http://www.rgniyd.gov.in/sites/default/files/pdf/academic/14-15/application_2014-16.pdf என்ற இணையதளம் சென்று விண்ணப்பத்தைப் பெறலாம்.
தகுதி தேர்வு, நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் ஒரு மாணவரின் செயல்பாட்டின் அடிப்படையிலேயே வாய்ப்புகள் வழங்கப்படும்.
விண்ணப்பத்தை வழங்க இறுதிநாள் ஏப்ரல் 21.
எழுத்துத் தேர்வுக்கான தேதி மே 4.
நேர்முகத் தேர்வுக்கான தேதி மே 23 மற்றும் 24.