பயோ கெமிஸ்ட்ரி படித்தவர்களுக்கு எங்கு வேலை கிடைக்கும்? | Kalvimalar - News

பயோ கெமிஸ்ட்ரி படித்தவர்களுக்கு எங்கு வேலை கிடைக்கும்?நவம்பர் 10,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

இப்பகுதியில் அடிக்கடி குறிப்பிடுவது போல பயோ கெமிஸ்ட்ரியில் பட்டப்படிப்பு மட்டும் படிப்பவர்களுக்கு, பொதுவாக நல்ல வேலைகள் கிடைப்பதில்லை. மேற்படிப்பு முடிப்பவர்களுக்கு தேவை அதிகம் உள்ளது. ரப்பர், பிளாஸ்டிக்ஸ், எரிபொருள், பார்மாசூட்டிகல், காஸ்மெடிக்ஸ், டிடர்ஜென்ட், அக்ரோ கெமிக்கல் போன்ற துறைகளில் இன்றும் கடுமையான தேவைகள் உணரப்படுகிறது.

இந்துஸ்தான் லீவர், யூனிகெம் லாப் ஆகிய நிறுவனங்களில் பயோ கெமிஸ்ட்ரி படித்தவர்களுக்கு சிறந்த வரவேற்பு கிடைக்கிறது. தற்போதைய சூழலில் கெமோ இன்பர்மேடிக்ஸ் என்பது சிறந்த எம்.எஸ்சி., படிப்பாக திகழ்கிறது. இதை முடிப்பவருக்கு லுபின், கிளாக்ஸேஸ்மித் கிளைன் ரான்பாக்ஸி, பிபிசர், பிராக்டர் அன்டு கேம்பிள் ஆகிய நிறுவனங்கள் சிறந்த பணி வாய்ப்பை தருகின்றன.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us