அனிமேஷன் படித்தவருக்கு எங்கு வேலை கிடைக்கும்? | Kalvimalar - News

அனிமேஷன் படித்தவருக்கு எங்கு வேலை கிடைக்கும்?நவம்பர் 03,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

அனிமேஷன் படிப்பு தொடர்பான கேள்விகள் இப்பகுதியில் தொடர்ந்து இடம் பெறுகின்றன. முறையான படிப்பை விட அடிப்படையில் ஒருவர் பெற்றிருக்கும் திறன்கள் தான் இத்துறையில் நல்ல எதிர்காலத்தைத் தருகிறது. கிரியேட்டிவ் திறன், எதையும் உற்றுநோக்கும் திறன் மற்றும் வரையும் ஆர்வம் இருந்தால் அனிமேஷன் துறை உங்களுக்குப் பொருந்தும்.

கடந்த 10 ஆண்டுகளாக ஐ.டி., ஐ.டி.இ.எஸ்., துறைகளின் அசுர வளர்ச்சியோடு அனிமேஷன் துறையும் இந்தியாவில் வளர்ந்துள்ளது. டிவி பிரிண்டிங், இன்டர்நெட், சினிமா, வெப் டிசைன், பேஷன் டிசைன், அப்பாரல் டிசைன், விளம்பரம் மற்றும் மீடியா துறைகள் வேகமாக வளருவதால் அனிமேஷன் திறன் பெற்றவருக்கான தேவை ஏராளமாக உள்ளது.

இத்துறையில் பகுதிநேர மற்றும் முழுநேர வாய்ப்புகளுக்கும் பஞ்சமில்லை. குறிப்பிட்ட சில தனியார் சிறப்புப் பயிற்சி நிறுவனங்களில் அனிமேஷன் படிப்புகளை படிக்கலாம். மூன்றாண்டு பட்டப்படிப்பு மற்றும் பி.ஜி., டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் நடத்தப்படுகின்றன. பொதுவாக நல்ல பயிற்சி நிறுவனத்தில் அனிமேஷன் படிப்புக்கான கட்டணம் அதிகம் தான் என்றாலும் இவற்றை தவணைமுறையில் பிரித்துக் கட்டலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us