மைக்ரோபயாலஜி படிக்கிறேன். இதற்கான வேலை வாய்ப்புத் துறைகள் பற்றி கூறவும். | Kalvimalar - News

மைக்ரோபயாலஜி படிக்கிறேன். இதற்கான வேலை வாய்ப்புத் துறைகள் பற்றி கூறவும். நவம்பர் 03,2008,00:00 IST

எழுத்தின் அளவு :

மருத்துவம், பயோகெமிஸ்ட்ரி, ஜெனிடிக்ஸ், மாலிகூலர் பயாலஜி, எகாலஜி போன்ற துறைகளில் அதிகம் பயன்படும் மைக்ரோபயாலஜி படிப்பானது தற்போது மிகவும் பிரகாசமான வேலை வாய்ப்புகளைத் தரும் துறையாக உள்ளது. வெறும் பட்டப்படிப்பு முடிப்பவரை விட இதில் பட்டமேற்படிப்பு முடிப்பவருக்கே வேலை வாய்ப்புகள் அதிகம் கிடைக்கின்றன.

மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி போன்ற தகுதி பெறுபவர்களுக்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வேலை வாய்ப்புகள் அதிகம் கிடைக்கின்றன. இரவு பகல் பாராமல் உழைக்கும் மனப்பாங்கு உடையவராகவும் எதையும் கூர்ந்து கவனித்து ஆய்வு செய்பவராகவும் அடிப்படை குண நலன் உடையவருக்கு இத் துறை மிகவும் பொருந்தும். பெரிய நவீன மருத்துவமனைகள், ஆய்வுக் கூடங்கள் போன்றவற்றில் இதை முடித்தவர்கள் வேலை பார்க்கலாம். மருந்து பொருட்கள் தயாரிக்கும் கம்பெனிகள், உணவுப் பொருள் உற்பத்தி கூடங்கள், குடிநீர் பதப்படுத்தும் நிறுவனங்கள், ஸ்டார் ஓட்டல்கள் போன்றவற்றிலும் வாய்ப்புகள் உள்ளன.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us