வனவர் பணி தேர்வு பெண்கள் ஆர்வம் | Kalvimalar - News

வனவர் பணி தேர்வு பெண்கள் ஆர்வம்டிசம்பர் 07,2018,11:55 IST

எழுத்தின் அளவு :

சென்னை:வனவர், வனக்காப்பாளர் பணிகளுக்கு, 44 ஆயிரம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான, ஆன்லைன் தேர்வுகள் நேற்று துவங்கின.

தமிழகத்தில், 300 வனவர் பணியிடங்களுக்கு, 1.10 லட்சம் பேரும், 878 வனக்காப்பாளர் பணியிடங்களுக்கு, 98 ஆயிரத்து, 801 பேர் என, மொத்தம், 2.1 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில், ஆறு பேர் திருநங்கையர்; 44 ஆயிரம் பேர் பெண்கள்.வனத்துறையில், களப் பணியில் ஈடுபடும் வனவர், வனக்காப்பாளர் பதவிகளுக்கு, பெண்கள் அதிகம் விண்ணப்பித்துள்ளது, அவர்களின் ஆர்வத்தை காட்டுவதாக உள்ளது. இவர்களுக்கான ஆன்லைன் தேர்வுகள் நேற்று துவங்கின.

முதல் நாளில் பெரும்பாலான மையங்களில், மகளிர் விண்ணப்பதாரர்களே ஆர்வத்துடன் தேர்வில் பங்கேற்றனர். சென்னையில், கீழ்ப்பாக்கம், நந்தனம், பழைய மாமல்லபுரம் சாலை, கந்தன்சாவடி உள்பட, தமிழகம் முழுவதும், 139 மையங்களில் தேர்வுகள் நடந்தன.நந்தனம் மையத்தில் நடந்த தேர்வு பணிகளை, வனத்துறை தலைவர், மல்லேசப்பா பார்வையிட்டார். வனவர் பணிக்கு, டிச., 9 வரையும், வனக்காப்பாளர் பணிக்கு, டிச., 10, 11லும், தேர்வுகள் நடக்க உள்ளன.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us