பள்ளிகளில் கணினி ஆய்வகம் | Kalvimalar - News

பள்ளிகளில் கணினி ஆய்வகம்டிசம்பர் 07,2018,11:50 IST

எழுத்தின் அளவு :

சென்னை:சென்னை உயர் நீதிமன்றத்தில், சேலத்தை சேர்ந்த, பெரியசாமி பச்சைமுத்து என்பவர், தாக்கல் செய்த மனு:

மத்திய அரசு திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில், 462கோடி ரூபாய் செலவில், உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம்அமைக்க, டெண்டர் கோரப்பட்டது.தமிழ்நாடு பாடநுால் கழகம், இந்த டெண்டரை வெளியிட்டுள்ளது. 50கோடி ரூபாய்க்கு மேல் ஒப்பந்தபுள்ளி கோரும்போது, பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், இதில் பின்பற்றப்படவில்லை.எனவே, டெண்டரை, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அடங்கிய, &'டிவிஷன் பெஞ்ச்&' முன், விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு பதில் அளிக்கும்படி, பள்ளி கல்வித் துறை, தமிழ்நாடு பாடநுால் கழகத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை, 2019 ஜன., 8க்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.


வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar-advertisement-tariff-2018

Copyright © 2018 www.kalvimalar.com.All rights reserved | Contact us